News January 21, 2025
அருகிலேயே வைத்து பைடனை விமர்சித்த டிரம்ப்

அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பைடனை அருகில் வைத்துக்கொண்டே, அவரின் ஆட்சியில் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை; இயற்கை பேரிடர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சித்த டிரம்ப் , சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் உடனே நிறுத்தப்படும். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவேன் என சூளுரைத்தார்.
Similar News
News August 26, 2025
CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.
News August 26, 2025
வரலாற்றில் இன்று

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.
News August 26, 2025
புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.