News March 17, 2024
லாரி மோதி விபத்து – ஓட்டுநர் கால் நசுங்கின

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிப்பர் லாரி ஓட்டுநர் சுந்தர் என்பவரின் இரு கால்களும் நசுங்கின. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், வேலை வாய்ப்பு மோசடி ”வீட்டிலிருந்தே வேலை” தினமும் ரூபாய் 2000 வருமானம் என்று வாட்ஸ்அப்மெயில் மூலம் அழைப்பர். ஆரம்பத்தில் சிறிய வேலை கொடுத்து ரூ.100 – 500 போலியான சம்பளம் தருவார். அதன் பிறகு “பெரிய ப்ராஜெக்ட்” எடுக்க டெபாசிட் பணம் கொடுக்க வேண்டும் சொல்லி ஏமாற்றுவார்கள். பணம் அனுப்பியவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.
News August 18, 2025
3 கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அண்ணா மக்கள் இயக்கம், சமத்துவ மக்கள் கழகம், தமிழர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், அவற்றின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு வரும் 26 ஆம் தேதி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
திருவள்ளூர்: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருவள்ளூர் மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <