News November 24, 2024
டவர் கவரேஜ் பகுதியை வெளியிட டிராய் உத்தரவு

செல்போன் பயனாளர்கள் சிக்னல் கிடைக்காமல் சில பகுதிகளில் அவதிப்படுவர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், டிராய் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் டவர் கவரேஜ் உள்ளது என்பதை இணையதளம், செயலியில் வெளியிடும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்ததும் டவர் கவரேஜ் பகுதியை நாமே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News November 19, 2025
இருமல் மருந்துகளை இனி ஈஸியாக விற்க முடியாது

ம.பி.யில் இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாக்டரின் பரிந்துரை சீட்டு, மருந்து விற்பனைக்கான உரிமை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
News November 19, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தனர்

2026-ல் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் EPS-ஐ சந்தித்தனர். அப்போது 2026 தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
News November 19, 2025
எந்த மாநிலத்தில் தபால் வாக்குகள் அதிகம் தெரியுமா?

நேரில் வந்து வாக்களிக்க இயலாத தேர்தல் பணியாளர்கள், போலீசார், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்துகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகமாக ஆந்திராவில் சுமார் 5.12 லட்சம் தபால் வாக்குகள் 2024 தேர்தலில் பதிவாகியுள்ளன. 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் 3.76 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், சுமார் 3.11 லட்சம் தபால் வாக்குகளுடன் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.


