News April 6, 2025
ட்ரம்புக்கு சிக்கல்.. US-ல் வெடித்த போராட்டம்

ட்ரம்பை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் US-ன் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்ந்த விவகாரங்களில் ட்ரம்ப் மற்றும் மஸ்க் எடுத்த அதிரடி முடிவுகளைக் கண்டித்து 1200 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. பணிநீக்கம், நாடுகடத்தல் மற்றும் இதர பிரச்னைகளை சுட்டிக்காட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன. வரி விதிப்பால் மற்ற நாடுகளை பகைத்து கொண்ட டிரம்ப்பை சொந்த நாட்டிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
Similar News
News November 24, 2025
கபில் தேவ் பொன்மொழிகள்

* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. * உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.
News November 24, 2025
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஹைப்தம் டப்டாபை கொல்லப்பட்டுள்ளார். 12 வயதில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஹைப்தம், 2015-ல் அமைப்பின் முக்கிய நபராக கவனிக்கப்பட்டார். 2016-ல் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
News November 24, 2025
ஆஷஸ் தொடரில் ஆஸி.,க்கு ₹17 கோடி நஷ்டம்?

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., வெற்றி பெற்றது. அதேநேரம், இப்போட்டி 2 நாள்களிலேயே முடிவுற்றதால், 3, 4-ம் நாள்களுக்கான டிக்கெட் விற்பனை இல்லாமல் போனது. இதனால் ஆஸி., கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ₹17.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போதும் ₹65 கோடி இழப்பை ஆஸி., சந்தித்துள்ளது.


