News May 2, 2024

CSK அணிக்கு புதிய சிக்கல்

image

CSK வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். PBKS-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். நேற்றைய போட்டியுடன் முஸ்தஃபிசூர் ரகுமான் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டுள்ளது CSK அணிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

Similar News

News August 29, 2025

எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் மோடியின் ஜப்பான் பயணம்

image

8-வது முறையாக ஜப்பான் சென்றுள்ள PM மோடியின் பயணத்தில் பல முக்கியத்துவங்கள் உள்ளன. *மும்பை – ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம் *ரயில்வேயை நவீனமயமாக்க, ஜப்பானின் ‘ஷிங்கான்சென்’ தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது * US-ன் வர்த்தக பதற்றங்களால், ஜப்பானுடனான உறவை வலுப்படுத்துவது * இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது.

News August 29, 2025

டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு.. புதிய டிஜிபி யார்?

image

சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபி நியமிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News August 29, 2025

ஓரக்கண்ணால் சுண்டி இழுக்கும் அனன்யா பாண்டே

image

பாலிவுட்டில் கலக்கி வரும் அனன்யா பாண்டே, அட்லி – அல்லு அர்ஜுனின் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் உள்ளது. திரையுலகில் நுழைய நிறைய தடைகளை தாண்டியதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அனன்யா தெரிவித்திருந்தார். அனைத்தையும் மீறி இன்று வெற்றிகரமான நடிகையாக உள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இப்போ டிரெண்டாகியுள்ளது. மேலே உள்ள போட்டோஸை கண்டு ரசியுங்கள்..

error: Content is protected !!