News February 11, 2025

க்ரிப்டோ கரன்சி விற்கத் தொடங்கிய த்ரிஷா?

image

நடிகை த்ரிஷாவின் X தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News February 11, 2025

மாட்டிக் கொண்ட Ex.துணை முதல்வர்

image

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக SC/ST ஆணையம் விசாரித்து வந்த நிலையில், பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதை ஆணையம் இன்று உறுதி செய்தது. இதையடுத்து, அந்த நிலத்தை ஓபிஎஸ் பெயருக்கு மாற்றியதற்கான பட்டாவை ரத்து செய்யுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News February 11, 2025

துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா? ஷாக் ஆவீங்க…

image

திருமணமான இந்தியர்களில் 55% பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்கிறது ஓர் ஆய்வுமுடிவு. இவர்களில் பெண்கள் (56%) தான் அதிகம். ஆண்கள் 44% பேர். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களில் 48% பேர் குழந்தை பெற்ற தாய்மார்கள். பிரபல கிளீடன் செயலி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் திருமணமான ஆயிரக்கணக்கானோரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இது மாற்றமா… தடுமாற்றமா?

News February 11, 2025

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நாளை விளையாடவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளை வென்றிருக்கும் இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே 4 டி20 போட்டிகளை வென்று இந்தியா மொத்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.

error: Content is protected !!