News December 6, 2024
சூர்யாவுக்கு த்ரிஷா ஜோடி இல்லையாம்!

‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு டிச. 23ஆம் தேதி நிறைவடைகிறதாம்.
Similar News
News November 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.
News November 16, 2025
BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
ஆச்சரியமும் மர்மமும்: ஒரு கிராமத்தில் 450 இரட்டையர்கள்

ஒரு கிராமத்தில் 2 இரட்டையர்களை பார்ப்பதே அரிது. ஆனால், கேரளாவின் ‘கொதின்ஹி’ என்ற கிராமத்தில் 450 இரட்டையர்கள் உள்ளது ஆச்சரியத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்கும் இரட்டையர்களே பிறக்கின்றனர். இதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு ஆய்வாளர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இன்னும் விடை தெரியாமலேயே உள்ளது.


