News March 27, 2024
சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்திய திரிஷா

நடிகை திரிஷா ஒரு படத்துக்கான சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதற்கு முன்பு ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாகவும், ஆனால் தற்போது கமலின் தக் லைஃப் படத்தில் நடிக்க ரூ.12 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
Similar News
News January 19, 2026
காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றம்

TN காங்கிரஸில் அதிரடி மாற்றம் செய்து தேசிய தலைமை அறிவித்துள்ளது. உட்கட்சி பூசல், கூட்டணி விவகாரம், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநிலத் தலைமையின் உத்தரவையும் மீறிப் பல நிர்வாகிகள் பொதுவெளியில் பேசி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் கார்கே, ராகுல் உள்ளிட்டோரின் ஆலோசனைக்கு பிறகு 71 மாவட்டத் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்குமா?
News January 19, 2026
நாளை TN சட்டப்பேரவை: கவர்னர் உரையாற்றுவாரா?

ஆண்டுதோறும் சட்டப்பேரவை முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. 2021-ல் RN ரவி பொறுப்பேற்ற பிறகு 2022-ல் மட்டுமே உரையை முழுமையாக வாசித்தார். 2023-ல் சில பகுதிகளை தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். 2024, 2025-ல் தேசிய கீதம் பாடப்படவில்லை என உரையை வாசிக்காமலே வெளியேறினார். இந்நிலையில், நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்திலாவது உரையாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News January 19, 2026
கம்பீர் Era.. இந்தியாவின் ரெக்கார்டு தோல்விகள்!

இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்றதில் இருந்து ODI & டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது ★27 ஆண்டுகளுக்குப் பிறகு ODI-ல் இலங்கையிடம் தோல்வி (0-2) ★20 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில், SA அணியிடம் டெஸ்ட் தொடர் தோல்வி (0-2) ★AUS ODI தொடர் தோல்வி (1-2) ★இந்தியாவில் முதல் முறையாக, NZ-க்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் (0-3), ODI தொடர் தோல்வி (1-2).


