News August 25, 2024
விஜய் உடன் நடனமாடிய த்ரிஷா?

‘G.O.A.T’ படத்தின் ஸ்பெஷல் சாங் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், செப்.5ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளோடு திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், விஜய், த்ரிஷா இணைந்து நடனமாடிய சாங் சர்ப்ரைஸாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 8, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ள 17235 பெங்களூரூ – நாகர்கோவில் தினசரி விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?


