News February 24, 2025
திரிஷா, நயன் இல்ல; இவங்க தான் பெஸ்ட்..! சமந்தா பளீச்

இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அண்மையில் ரசிகர்களுடன் உரையாடினர். அப்போது ஒரு ரசிகர், யாரெல்லாம் பெஸ்ட் ஹீரோயின்ஸ்? என கேட்டிருந்தார். அதற்கு சமந்தா, அண்மையில் தனக்கு பார்வதி திருவோத்து, நஸ்ரியா, சாய் பல்லவி, அனன்யா பாண்டே, ஆலியா பட் ஆகியோரின் படங்கள் மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டார். உடனே ரசிகர்கள், இந்த லிஸ்டில் த்ரிஷா, நயன் ஏன் இல்லை எனக் கேட்கிறார்கள்.
Similar News
News February 24, 2025
மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
News February 24, 2025
அரசு ஊழியர்கள் போராட தடை!

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2025
3 ஆண்டுகளைக் கடந்த போர்.. இப்போது என்ன நிலை?

ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இரு தரப்பிலும் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறையால் உக்ரைன் தவித்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா, தற்போது உதவி செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. இருப்பினும் ரஷ்யாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது.