News July 24, 2024

சபாநாயகரின் கருத்துக்கு திரிணாமுல் எம்பி பதிலடி

image

பட்ஜெட் விவாதத்தில் பண மதிப்பிழப்பு பற்றி பேசக்கூடாது என்ற சபாநாயகரின் கருத்துக்கு, TMC எம்பி அபிஷேக் பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். பணமதிப்பிழப்பு பற்றி அவர் பேச முயன்ற போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, 2016இல் நடந்த சம்பவத்தை பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள் என்றார். 1976இல் நடைபெற்ற எமர்ஜென்சியை பற்றி மட்டும் பாஜகவினர் பேச எப்படி அனுமதி தருகிறீர்கள்? என அவர் பதில் கேள்வி எழுப்பினார்.

Similar News

News December 1, 2025

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

image

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிச.19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் SIR பணிகள், டெல்லி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

News December 1, 2025

ரெப்போ விகிதம் மேலும் குறைகிறது?

image

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, மேலும் 25பிபிஎஸ் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரெப்போ விகிதம் 5.5% உள்ளது. டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் RBI-ன் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படவுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் தணிந்துள்ளதால் இந்த குறைப்பு இருக்கலாம். அதேநேரத்தில் 2-வது காலாண்டில் நாட்டின் GDP 8.2% உயர்ந்திருப்பதால் மாற்றம் இல்லாமலும் போக வாய்ப்புள்ளது.

News December 1, 2025

காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு

image

காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். தற்போதைய நிலையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இருக்கிறது. அந்தவகையில் 82,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய தலைமுறை நிதி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 100% முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!