News June 26, 2024

திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி

image

மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு INDIA கூட்டணி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன் தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. அக்கூட்டணியின் சார்பாக சபாநாயகர் தேர்தலுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். இதுகுறித்து அறிவிப்பதற்கு முன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கூறியிருக்கும் TMC, ஆனாலும் சுரேஷுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

வாக்காளர்களை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள்: சீமான்

image

தேர்தல் ஆணையத்தின் SIR பணிகளை எதிர்ப்பது போல் திமுக அரசு நாடகமாடுவதாக சீமான் குற்றம்சாட்டினார். உண்மையில் SIR-ஐ எதிர்த்திருந்தால் அவசரமாக சட்டசபையை கூட்டி, இது சீரழிவு என திமுக சொல்லியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அன்று வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தீர்மானித்தார்கள் என்றும், இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தீர்மானிக்கிறார்கள் எனவும் சீமான் சாடினார்.

News November 13, 2025

மாதவிடாய் வலியால் உயிர்போகுதா? இதோ Solution!

image

மாதவிடாயின் போது வலியால் உயிர்போகுதா? கவலையவிடுங்க. சாலியா விதை உங்கள் பிரச்னையை தீர்க்கும். இந்த விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் எழுந்ததும் வடிகட்டி, தண்ணீரை குடியுங்கள். இதனை செய்தால் மாதவிடாய் வலி சற்று குறையும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதில் இரும்பு சத்தும் அதிகம் என்பதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு SHARE THIS.

News November 13, 2025

ஈடன் கார்டன் மைதானத்தில் போலீசார் குவிப்பு

image

இந்தியா – தெ.ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, மைதானம், வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் உள்ளிட்டவைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் நாள்களில் காலை 7 முதல் மாலை 7 வரை சரக்கு வாகனங்களுக்கு தடைவிதிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!