News March 16, 2024
திருச்சி: மரங்களை நட்ட அமைச்சர்!

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News January 18, 2026
திருச்சி: வரன் பார்க்க சென்றவர் பலி

திருப்பூர் மாவட்டம் புழுவப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மகனுக்கு வரன் பார்க்க டூவீலரில் சென்றபோது, நடுப்பட்டி அடுத்த சரளப்பட்டி அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 17, 2026
திருச்சி: தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்!

▶️சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்
▶️மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️உறையூர் வெக்காளியம்மன் கோயில்
▶️பொன்மலை பொன்னேஸ்வரி அம்மன் கோயில்
▶️குழுமாயி அம்மன் கோயில்
▶️தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில்
▶️வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில்
உங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
திருச்சி: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

திருச்சி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள்<


