News March 16, 2024

திருச்சி: குட்கா விற்ற 3 பேர் கைது 

image

திருவெறும்பூர் பள்ளி அருகே நேற்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக பென்னி சேவியர், முருகேசன், ஜான் தனபால் ஆகிய 3 பேரை திருச்சி எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய 1 கார்,12 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்று இவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 8, 2025

திருச்சி: கலால் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

image

திருச்சி மாநகரில் இயங்கி வரும் உரிமம் பெற்ற மது விற்பனை கூடங்களில் உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டுமென, திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

News August 8, 2025

திருச்சி: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’81’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News August 8, 2025

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் முகாம் 1/2

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் நாளை (ஆக.,9) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியா் சரவணன் தெரிவித்துள்ளாா். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17337815>>முகாம் நடைபெறும் பகுதிகள்<<>>)

error: Content is protected !!