News March 17, 2024
திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.
Similar News
News November 28, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓயாமரி வழியாக மார்க்கெட் செல்லும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடத்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார், சங்கரன்பிள்ளை சாலை வழியாக செல்லலாம். இபி ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பால்பண்ணை, மார்க்கெட் வழியாக செல்லலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.