News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பேரவையில் அஞ்சலி

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதியடைந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 84 வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
Similar News
News September 17, 2025
வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் குரூப் ‘A’-வில் உள்ள பாகிஸ்தான், முதல் போட்டியில் ஓமனை வீழ்த்தியது. ஆனால் 2-வது போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய UAE-க்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் அந்த அணி சூப்பர் 4 சுற்று வாய்ப்பை UAE-விடம் பறிகொடுத்துவிடும். குரூப் ‘A’ ஏற்கெனவே இந்தியா சூப்பர் 4-க்கு தகுதி பெற்றுவிட்டது.
News September 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,270-க்கும், சவரன் ₹82,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று(செப்.16) சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
News September 17, 2025
இளைஞர்கள் வாக்குகளை குறிவைக்கும் நிதிஷ்

பிஹாரில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அம்மாநில CM நிதிஷ், இளைஞர்களின் வாக்குகளையும் குறிவைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கல்விக்கடன் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி, கல்விக்கடன் திருப்பி செலுத்தும் அவகாசம் 5-லிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளார். இதேபோல் தான், தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது