News July 27, 2024
அண்ணாமலை நேரில் அஞ்சலி

பாஜக முன்னாள் எம்.பி., மாஸ்டர் மதன் (93) உடலுக்கு, அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்த மாஸ்டர் மாதன், 1998 மற்றும் 1999-2004 வரை நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்தவர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு அவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
Similar News
News December 3, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
News December 3, 2025
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.
News December 3, 2025
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.


