News December 16, 2025

Tree man என கொண்டாடப்படும் கோவை பஸ் கண்டக்டர்!

image

சம்பாதிப்பதில் உங்களுக்காக கொஞ்சம் சேமியுங்க என்பார்கள். ஆனால், இவர் உலகிற்கே சேர்த்து சேமிக்கிறார். கோவையை சேர்ந்த யோகநாதன் Tree man என புகழப்படுகிறார். அரசு பஸ் கண்டக்டரான இவர், தனது சம்பளத்தில் 40% மரம் நடவே செலவழிக்கிறார். இதுவரை 4,20,000 மரங்களை நட்டுள்ள மாரிமுத்து, துணை ஜனாதிபதியின் Eco Warrior விருது, தமிழக அரசின் சுற்று சூழல் சேவை வீரர் போன்ற அங்கீகாரங்களை பெற்றவர். நீங்களும் மரம் நடுங்க!

Similar News

News December 18, 2025

உலகக் கோப்பை நாயகிகளை நேரில் வாழ்த்திய சச்சின்

image

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் WC-ஐ வென்ற இந்திய மகளிர் அணியை சச்சின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், பலருக்கு பார்வை இருந்தாலும், சிலருக்கே தொலைநோக்கு பார்வை இருப்பதாக பதிவிட்டுள்ளார். உலக அரங்கில் இந்தியாவை பெருமையடைய செய்துள்ள இந்த வீராங்கனைகள், அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக திகழ்வதாகவும் பாராட்டியுள்ளார்.

News December 18, 2025

நேரத்தை மிச்சம் செய்யும் shortcuts

image

கம்ப்யூட்டரில் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பணிகளை எளிதாகவும் வேகமாகவும் முடிக்க உதவுகின்றன. அன்றாட பணிகளில் கீபோர்டு ஷார்ட்கட்ஸ் பயன்படுத்துவது, குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்பட உதவுகிறது. உங்கள் நேரத்தை சேமித்து, பணியை எளிதாக்கும் சில கீபோர்டு ஷார்ட்கட்ஸை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 18, 2025

விஜய்க்கு ஓட்டு போடலனா விஷம் தான்: பெண் தொண்டர்

image

விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும், மக்களுக்கு நல்ல சலுகைகளை வழங்குவார் என இளம்பெண் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு பரப்புரையில் கலந்துகொண்ட அப்பெண், தனது வீட்டில் 9 பேர் வாக்களிக்கும் தகுதியுடன் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என்றார். ஒருவேளை விஜய்க்கு வாக்களிக்கவில்லை என்றால், சோற்றில் விஷம் வைத்துவிடுவேன் என்று கேலியாக தெரிவித்தார்.

error: Content is protected !!