News April 18, 2025
அதிரடியால் புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்

MI-க்கு எதிரான போட்டியில் SRH-ன் டிராவிஸ் ஹெட் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போட்டியில் 28 ரன்கள் எடுத்தது மூலம், IPL வரலாற்றில் 1000 ரன்களை வேகமாக கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை ஹெட் படைத்தார். இந்த மைல்கல்லை 575 பந்துகளில் அவர் எட்டினார். இந்தப் பட்டியலில் ரஸ்ஸல் (545), கிளாசென் (594), சேவாக் (604), மேக்ஸ்வெல் (610), யூசுப் பதான் (617) மற்றும் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News December 14, 2025
வாக்கு திருட்டு முழக்கத்துடன் டெல்லியில் காங்., பேரணி

பாஜக மற்றும் ECI மீது ராகுல் வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பிஹார் தேர்தலில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனினும் அதை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் காங்கிரஸ், டெல்லியில் இன்று பேரணி நடத்த உள்ளது. மாலை 4 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் தொடங்கும் பேரணியில், சோனியா, மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
News December 14, 2025
மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20-ல் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், 2-வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பாதைக்கு திரும்ப இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். அதேசமயம் கடும் போராட்ட குணம் கொண்ட SA அணி மீண்டும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
News December 14, 2025
தங்கமே கொடுத்தாலும் வாக்கு கிடைக்காது: செல்லூர் ராஜூ

திமுக நான்கே முக்கால் வருடங்களில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது என Ex அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திமுக தொடங்கி வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் CM, DCM, அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுகதான் என்றும், திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


