News April 30, 2025
34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.
Similar News
News October 21, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், குமரி, நாகை, ராமநாதபுரம், கடலூர் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்க சென்றவர்களும் விரைவில் கரை திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறையினர், போலீஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்கின்றனர்.
News October 21, 2025
மூலிகை: முடவாட்டுக்கால் கிழங்கின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலி, முடக்குவாதம், எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும் *வயிற்று உப்புசம் & மலச்சிக்கலையும் குறைக்கிறது *இது பாறைகளில் இருந்து இரும்பு, கால்சியம், தாமிரம், தங்கம் மற்றும் சிலிக்கா போன்ற கனிமச்சத்துக்களை உறிஞ்சி வளருவதால், ஊட்டச்சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது. இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 21, 2025
பிற மதங்களுக்கு உதயநிதி இப்படி கூறுவாரா? தமிழிசை

‘நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்’ என உதயநிதி கூறியிருந்தார். ஆனால், பிற மதத்தினருக்கு ‘நம்பிக்கை உள்ளவர்கள்’ என்ற வார்த்தையை உதயநிதி பயன்படுத்துவதில்லை என்று தமிழிசை சாடியுள்ளார். திமுக போலி மதச்சார்பின்மையை கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்துக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே திமுக செயல்படுவதாகவும் விமர்சித்தார். இதற்கு 2026 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பர் என்றும் கூறினார்.