News August 4, 2024
சென்னையில் 20 சுங்க இலாகா அதிகாரிகள் டிரான்ஸ்பர்

சென்னையில் 4 கண்காணிப்பாளர்கள் உள்பட 20 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கக்கடத்தல் தொடர்வதாக கிடைத்த தகவலின்பேரில், அண்மையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.14 கோடி மதிப்பு தங்கம் உள்ளிட்டவை சிக்கிய நிலையில், 20 பேரின் இடமாற்றம் நடந்துள்ளது. ஆனால் கடத்தலுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
லியானர்டோ டாவின்சி பொன்மொழிகள்

*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *நேராக நடப்பவர் அரிதாகவே விழுகிறார். *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப்பதற்குச் சமமாகும். *ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.
News November 14, 2025
அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்

தெலங்கானா முன்னாள் CM மகன் KTR-ஐயும், நடிகை சமந்தாவையும் இணைத்து, அம்மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் கொண்டா சுரேகா 2024-ல் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகர் <<14263995>>நாகர்ஜூனா<<>> அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், சுரேகா பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை அடுத்து, நாகர்ஜுனா தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
News November 14, 2025
சீனாவுக்கு செக் வைக்க எல்லையில் விமானப்படை தளம்

சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக, சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து 35 கி.மீ., தொலைவில், நியோமோ என்ற இந்திய விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில், லடாக்கில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான விமானப்படை தளம் இதுவாகும். 2.7 கி.மீ., நீளமுள்ள இதன் ஓடுபாதையில் விமானங்கள் எளிதாக தரையிறங்க முடியும். இதன்மூலம், படைகள், ராணுவ தளவாடங்கள், விரைவாக குவிக்க முடியும்.


