News June 26, 2024
மின் ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், ₹75 கோடி மதிப்பீட்டில் மூன்று புதிய 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள், ஆறு 33/11 கி.வோ துணை நிலையங்களிலுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
அன்புமணி மார்பில் குத்திவிட்டார்: ராமதாஸ்

அன்புமணி சில ஆண்டுகள் பொறுக்க மாட்டாரா என்று பலர் தன்னிடம் கேட்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை, அன்புமணி செய்தது ஞாபகம் வந்துவிடுகிறது என்று நா தழுதழுக்க வேதனையுடன் கூறியுள்ளார். தன்னை அன்புமணி மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டதாக கூறிய ராமதாஸ், ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய் என்றும் சேலத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் பேசியுள்ளார்.
News December 29, 2025
BREAKING: பிரபல தமிழ் நடிகை தற்கொலை

<<18542901>>சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரியை<<>> தொடர்ந்து, கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், கன்னட சீரியல்கள் மூலம் திரைத்துறையில் அறிமுகமானர். தற்போது, தமிழில் கௌரி சீரியலில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
News December 29, 2025
பாமகவை பிடித்த பீடை ஒழிந்தது: GK மணி

ராமதாஸை கொல்ல வேண்டும் என சொல்பவர்களை அழைத்து அன்புமணி பதவி தருவதாக GK மணி குற்றஞ்சாட்டியுள்ளார். சூழ்ச்சியால் பாமகவை அபகரிக்க அன்புமணி பார்ப்பதாக கூறிய அவர், மகனால்தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார் எனவும் பேசியுள்ளார். மேலும், பாமகவை பிடித்த பீடை டிசம்பர் 31-ம் தேதியோடு ஒழிந்தது எனவும், 2026-ம் ஆண்டுக்கான வெற்றிக்கூட்டணியை ராமதாஸ் அமைப்பார் எனவும் கூறியுள்ளார்.


