News June 13, 2024
20 நிமிடத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது

இந்த ஆண்டு ஆயுத பூஜை அக்.11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி, 3 நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் அக்.10ஆம் தேதி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 20 நிமிடங்களில் முடிந்தது. இணையதளம் வாயிலாக 80% பேரும், கவுண்ட்டர்கள் வாயிலாக 20% பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 27, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹15,000 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலை குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹15 குறைந்து ₹245-க்கும், 1 கிலோ வெள்ளி ₹15,000 குறைந்து ₹2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹15,000 குறைந்ததால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News March 27, 2026
சரியான நேரத்திற்கு விஜய் வர வேண்டும்: தேர்தல் அதிகாரிகள்

பெரம்பூரில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கும் நிலையில், தவெகவினருடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், விஜய் சரியான நேரத்திற்கு வந்து பரப்புரையை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுபோன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
News March 27, 2026
CPM-க்கு தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

திமுக, காங்., வென்ற தொகுதிகளை CPM கேட்பதால், அக்கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் CPM வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை, கீழ்வேளூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக வென்ற பல்லாவரம், காங்கிரஸ் வென்ற விளவங்கோடு தொகுதிகளையும் CPM கேட்பதால், தொகுதியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


