News June 17, 2024

ரயில் விபத்துகளும், ராஜினாமா செய்த அமைச்சர்களும்…(4)

image

2017ஆம் ஆண்டு உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 156 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து, கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் 100 பேர் காயம் அடைந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்க பிரதமர் மோடி தயக்கம் காட்டினார்.

Similar News

News April 6, 2026

சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு

image

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்றவற்றால் உயிரிழப்பவர்களை விட, காற்று மாசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 என்ற நுண்ணிய துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு High BP ஏற்படும் ஆபத்து அதிகமாம். SHARE IT

News April 6, 2026

தலைவர் பதவி ராஜினாமாவா? செல்வப்பெருந்தகை

image

தேர்தலுக்கு பின் TN காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக 2 நாள்களுக்கு முன் செல்வப்பெருந்தகை பேசியிருந்தார். இந்த முடிவுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு தொடர்பாக உள்கட்சியில் ஏற்பட்ட சலசலப்புகளே காரணம் என பேசப்பட்டது. இந்நிலையில், மக்கள் தன்னை தொகுதியில் முன்புபோல பார்க்க முடியவில்லை என கூறியதால், இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News April 6, 2026

மனைவியை கொன்று சடலத்துடன் படுத்த கணவன்

image

மனைவியை கொன்று அவரது சடலத்துடன் 2 நாள்கள் கணவன் தூங்கிய சம்பவம் ம.பி.,யை அதிர வைத்துள்ளது. மனைவி ரிமா பாய் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கணவன் ஜெகதீஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மனைவி உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அதே அறையில் 2 நாள்கள் ஜெகதீஷ் தூங்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!