News August 31, 2025
TRAI பெயரில் போலி IVR மோசடி எச்சரிக்கை!

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. TRAI அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி போலி IVR அழைப்புகள் செய்து, “உங்கள் மொபைல் எண் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படுகிறது, இல்லையெனில் முடக்கப்படும்” என மிரட்டி மோசடி செய்கிறார்கள். TRAI ஒருபோதும் OTP, தனிப்பட்ட தகவல், எண் சரிபார்ப்பு அல்லது துண்டிப்பு குறித்து அழைப்போ, செய்தியோ அனுப்பாது.
Similar News
News September 1, 2025
மதுரை மக்களே உங்க வீட்டில் சுபநிகழ்வா??

மதுரை மக்களே உங்கள் வீட்டின் சுபநிகழ்வுகளுக்கு மண்டபத்திற்கு ஆகும் செலவை நினைத்து கவலையா இருக்கீங்களா?? உங்கள் செலவை குறைக்க ஒரு வழி உள்ளது. மதுரை மாநகராட்சியின் சார்பாக 40க்கும் மேற்பட்ட சமுதாயக்கூடங்கள் உள்ளது. இதில் உங்கள் வசதிக்கு ஏற்ப மண்டபங்களை தேர்வு செய்து இங்கு<
News September 1, 2025
மதுரைக்கு இன்று எடப்பாடி வருகை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற தலைப்பின் கீழ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் மதுரை வந்து 4 நாட்களுக்கு மதுரையில் உள்ள பல்வேறு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
News September 1, 2025
மதுரை – பரவூணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளையொட்டி, தெற்கு ரயில்வே மதுரை-பரவூணி சிறப்பு ரயில்களை (06059/06060) இயக்குகிறது. செப்.10 முதல் நவ.29ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள், மதுரையில் இரவு 8.40 மணிக்கும், பரவூணியில் இரவு 11:00 மணிக்கும் புறப்படும். 16 ஏசி 2 பொதுபெட்டிகள் கொண்ட இந்த ரயில் தின்டுக்கல், சேலம், விஜயவாடா, புவனேஸ்வர், ஹௌரா உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள் உள்ளன.