News May 31, 2024
ஹீட் ஸ்ட்ரோக்கால் மாணவர் உயிரிழந்த சோகம்

வட மாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை, தற்போது தமிழகத்தையும் தாக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர் அருகே உயிரிழந்த பள்ளி நண்பனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற +2 மாணவன் சக்தி, வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News September 19, 2025
சீனாவிற்கு செக் வைக்க அது எங்களுக்கு வேண்டும்: டிரம்ப்

ஆஃப்கனில் உள்ள பக்ரம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அது தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால், மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த விமானப்படை தளத்தை, ஆஃப்கனில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியதும் அமெரிக்கா விட்டுச் சென்றது.
News September 19, 2025
பிரபாஸ் VS தீபிகா ரசிகர்கள் இடையே வார்த்தை போர்

<<17750330>>‘கல்கி 2’ <<>>படத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீபிகா, பிரபாஸ் ரசிகர்களுக்கு இடையே சோஷியல் மீடியாவில் போர் வெடித்துள்ளது. ஷூட்டிங் நேரத்தை குறைக்க சொல்லி, கமிட்மெண்ட் இல்லாமல் இருந்தது தான் தீபிகா வெளியேற்றத்திற்கு காரணம் என பிரபாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், கர்ப்பிணியாக இருந்த போது ‘கல்கி 1’-ல் நடித்த தீபிகாவின் கமிட்மெண்ட் பற்றி பேச தகுதியில்லை என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
News September 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 19, புரட்டாசி 3 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.