News April 7, 2025
தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண்ணுக்கு சோகம்

இந்தியாவை சுற்றிப் பார்க்க ஆசையாய் வந்த வெளிநாட்டு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தாஜ்மஹாலில் நடந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளம்பெண்(28), தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றபோது, தொடக்கூடாத இடங்களில் தொட்டு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சிசிடிவி காட்சி மூலம் ஆக்ராவைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News April 11, 2025
அங்கன்வாடியில் வாரத்தில் 2 நாட்களுக்கு Egg Fried Rice!

அங்கன்வாடி குழந்தைகள் வாய்க்கு ருசியாக சாப்பிட Egg fried rice, கொண்டைக்கடலை சுண்டல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா அரசுதான் மதிய சத்துணவு திட்டத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. ஊட்டச்சத்துடன் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என்பதற்காக வாரத்தில் 2 நாள்களுக்கு இந்த புதிய மெனு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கொடுத்ததும் 26 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடிகளில் அமலாகவுள்ளது.
News April 11, 2025
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. நள்ளிரவில் சென்னை எண்ணூரில் 4 செ.மீ, திருவள்ளூர் செங்குன்றத்தில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
News April 11, 2025
அதிமுகவின் சந்திரசேகர் விலகல்.. பின்னணி என்ன?

SP வேலுமணியின் நிழலாக வலம் வந்த <<16057667>>சந்திரசேகர் <<>>அதிமுகவிலிருந்து விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நகர்வு இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் கோவை சென்றிருந்த முதல்வரிடம் வரும் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதியிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றார். அதன் தொடர்ச்சியாகவே பிற கட்சியினரை திமுக வசம் இழுக்கும் படலம் தொடங்கியுள்ளதாம்.