News November 19, 2024

வறுமையை விரட்டச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

image

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராசாத்தி, வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றிருந்தார். அதன்பின் சொந்த ஊர் திரும்பாத நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாயகம் திரும்பிய அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பே மரணித்தார்.

Similar News

News April 7, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 7, பங்குனி 24 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News April 7, 2026

ஆப்கானின் சோகத்தில் கைகொடுக்கும் இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் சமையல் பொருள்கள், மருந்துகள், தார்ப்பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் உள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணை நிற்பதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News April 7, 2026

திமுக கொடுத்தது சின்ன தோசை: பிரவீன் சக்கரவர்த்தி

image

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையிலும் மீண்டும் கூட்டணி குறித்து திமுக, தவெகவை ஒப்பிட்டு பிரவீன் சக்கரவர்த்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. திமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற முயன்றோம். ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கள் என்றனர். மற்றொரு பக்கம் கல்யாண விருந்து வைத்து அழைப்பு விடுத்தனர். எனினும் பல்வேறு காரணங்களால் 28 இடங்களை காங்., தலைமை ஏற்றுக்கொண்டது என கூறியுள்ளார்.

error: Content is protected !!