News April 9, 2025
10 வயது மூத்த பெண்ணுடன் காதலால் நேர்ந்த சோகம்

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது தகாத உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிரிக்க உறவினர்கள் முடிவு செய்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
Similar News
News September 1, 2025
‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை முற்பகல் 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், திரைக்கு வருவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில், நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
News September 1, 2025
60% ஊழியர்களை நீக்கும் MPL

ஆன்லைன் கேமிங் நிறுவனமான மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. <<17543188>>ஆன்லைன் கேமிங் தடை சட்ட மசோதா<<>> தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
News September 1, 2025
கிரிக்கெட்டில் அஸ்வினின் அடுத்த பயணம்

துபாயில் நடைபெறும் ILT20 போட்டிகளில் அஸ்வின் விளையாடவுள்ளார். சமீபத்தில் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ILT20 தொடரில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதில் விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்க அஸ்வினை பல அணிகள் அணுகியுள்ளன. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ILT20-ல் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, யூசப் பதான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 2-ம் தேதி ILT20 தொடங்குகிறது.