News February 16, 2025
‘லொள்ளு சபா’ நடிகருக்கு நேர்ந்த சோகம்!

ஆரம்பக் காலங்களில் சந்தானத்துடன் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் சிரிக்கோ உதயா. பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சந்தானத்தின் பல முக்கிய காமெடி சீன்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில், தீராத சர்க்கரை நோயால் ஓமந்தூரார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று ஒரு கால் அகற்றப்பட்டது. இதையடுத்து, நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பண உதவி செய்தனர்.
Similar News
News November 23, 2025
திமுக மீது வன்மம் இல்லை: விஜய்

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் எம்ஜிஆர் பாடலுடன் விஜய் தனது பேச்சை தொடங்கினார். அப்போது, திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை. ஆனால், திமுகவினருக்கு வேண்டுமானால் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம் என்று சாடினார். மேலும், கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்கும் திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான் என்று விமர்சித்தார்.
News November 23, 2025
அனைத்து சாதியினரையும் நீதிபதியாக்கிய கவாய்!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல மாநில ஐகோர்ட்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 129 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 93 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் SC பிரிவினர், 11 OBC, 13 சிறுபான்மையினர் மற்றும் 15 பெண் நீதிபதிகள் அடங்குவர்.
News November 23, 2025
BREAKING: அதிமுக அறிவித்தது

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடும் இப்பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.


