News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
Similar News
News November 16, 2025
PCOS பிரச்னையால் முடி கொட்டுதா? இதோ solution!

PCOS பிரச்னையால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு முடி கொட்டுதா? கவலைவேண்டாம். இதனை ஈஸியா குறைக்கலாம். ஆளி விதைகளை ஸ்மூத்தி, தயிர் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடுங்கள். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு, முடி கொட்டுவதும் குறையும். மேலும் அதிமதுரம் டீ குடிப்பதும் உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.
News November 16, 2025
ஸ்டாலின் பிஹார் சென்றதன் விளைவு இதுதான்: நயினார்

பிஹார் தேர்தலில் CM ஸ்டாலின் பிரசாரம் செய்ததன் மூலம், 202 தொகுதிகளில் NDA கூட்டணி வென்றுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும், NDA கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிஹாரின் முஸாஃபர்பூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்த நிலையில், அங்கு 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
News November 16, 2025
தங்கம் விலை மொத்தம் ₹2,800 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ₹1280, நேற்று ₹1520 என 2 நாளில் மொத்தம் ₹2800 தங்கம் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


