News September 9, 2025
விஜய்காந்த் வீட்டில் துயரம்.. இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

விஜயகாந்தின் மூத்த சகோதரியான டாக்டர் விஜயலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என்று EPS வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்

செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து EPS அதிரடியாக நீக்கியுள்ளார். ஈரோடு மேற்கு பொறுப்பாளர்கள் செல்வன், அருள் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணை செயலாளர் மருதமுத்து, மாவட்ட IT பிரிவு துணை தலைவர் மணிகண்டனை அடிப்படை உறுப்பினர், பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
News September 10, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு… திமுகவை சாடிய அன்புமணி

சமூகநீதியில் அக்கறை இருப்பது போல் திமுக நடிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதை தனது X தள பக்கத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 3 முறை வாய்ப்பு கிடைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை