News March 16, 2024

OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ பணிகளால் இன்று(மார்ச் 16) முதல் ஒரு வாரத்திற்கு OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் துர்யா ஹோட்டல் முன்பு ‘U-turn’ செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூரிலிருந்து வருவோர் உலக வர்த்தக மையம் முன்பு ‘U-turn’ எடுத்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்லலாம்.

Similar News

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

இதுவரை 55 பேருக்கு பாதிப்பு

image

திருவல்லிக்கேணி பகுதியில், பிரபலமான ‘ஹோட்டல் பிலால் பிரியாணி’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு (மார்.30) முந்தைய நாள் இங்கு பீப், ஷவர்மா, பிரியாணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை, 55 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 3, 2025

பிலால் ஹோட்டல் விவகாரம் – இதுவரை 55 பேர் பாதிப்பு

image

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரின் உடல்நலம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 55 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!