News February 24, 2025
கர்நாடகா – மகா., இடையே போக்குவரத்து முடக்கம்

கர்நாடகாவின் பெலகாவி, மகாராஷ்டிரா எல்லையில் அமைந்திருப்பதால் மராத்தி மொழி பேசும் மக்களே அதிகம். பிப்.21ல் இங்கு கர்நாடக அரசு பஸ்ஸில் 14 வயது மராத்தி சிறுமியிடம், கன்னடத்தில் பேசுமாறு கண்டக்டர் கூறியதால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு சித்ரதுர்காவில் மகாராஷ்டிரா அரசு பஸ்ஸூம், புனேவில் கர்நாடக அரசு பஸ்ஸூம் சூறையாடப்பட்டன. இதனால், 2 மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முடங்கியுள்ளது.
Similar News
News February 24, 2025
பங்குச்சந்தைகள் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்!

இந்தியப் பங்குச்சந்தைகளின் தொடர் வீழ்ச்சிக்கு 3 காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். முதலாவதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை தொடர்ந்து விற்பது, இரண்டாவதாக ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்திப்பது வீழ்ச்சிக்கு காரணமாக அறியப்படுகிறது. மூன்றாவது, அமெரிக்க பண வீக்கம், பிரிக்ஸ் நாடுகள் மீதான அதிபர் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் பங்குச்சந்தைக்கு அதிக அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.
News February 24, 2025
ஒற்றைத் தலைமையே தொடர் தோல்விக்கு காரணம்: OPS

அதிமுகவின் தொடர் தோல்விக்கு ஒற்றைத் தலைமையே காரணம் என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வதாக இபிஎஸ்-ஐ மறைமுகமாகச் சாடியுள்ளார்.
News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.