News April 10, 2025
வர்த்தக போர்: சீனாவுக்கு 125% வரி விதித்த அமெரிக்கா

அமெரிக்க பொருட்களுக்கு 34% இறக்குமதி வரி விதித்த சீனாவுக்கு பதிலடியாக, அதன் பொருட்கள் மீதான வரியை 104% அதிகரித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா வரியை 84% அதிகரித்தது. உடனே வரியை 125% உயர்த்துவதாக புதிய அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே நேரம் 70 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 18, 2025
தெற்கு, மேற்கு மாவட்டங்களை குறிவைத்து BJP- ADMK கூட்டணி

கிராமப்புறங்களில் அதிமுக வலுவாக இருந்தாலும், நகர்ப்புற பகுதிகளில் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளதாக India Today கூறியுள்ளது. தற்போது பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் மூலம் நகர்ப்புறங்களில் வாக்கு வங்கியை கூட்ட முடியும் என அதிமுக நம்புகிறது. குறிப்பாக, பாஜக கூட்டணியால், தென் மாவட்டங்களிலும், மேற்கு (கொங்கு) மாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News April 18, 2025
ஹாரி பாட்டர் நாயகி, எலான் மஸ்க் கொண்டாட்டம்

திருநங்கைகளை பெண் என்ற சட்டப்பூர்வ வரையறைக்குள் சேர்க்க முடியாது என்ற இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளா் ஜே.கே.ரவுலிங் வரவேற்றுள்ளார். இங்கிலாந்து முழுவதும் உள்ள பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை கோர்ட் பாதுகாத்ததாகவும், இந்த தீர்ப்பை பார்த்து தான் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஃபயர் இமோஜிகளை பறக்கவிட்டு வரவேற்றுள்ளார்.
News April 18, 2025
இன்று உலக பாரம்பரிய தினம்

உலக பாரம்பரிய தினம் (ஏப்.18) என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. இந்த நாள் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களின் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில், மகாபலிபுரம் கோயில், தாஜ்மஹால், அஜந்தா குகைகள், கோனார்க் சூரியக் கோயில் போன்ற அற்புதமான வரலாற்று நினைவுச்சின்னங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது