News August 17, 2025

வர்த்தக பேச்சுவார்த்தை ரத்து..இந்தியாவுக்கு பின்னடைவு

image

இந்திய ஏற்றுமதி மீதான USA-ன் 25% கூடுதல் வரிவிதிப்பு ஆக., 27-ல் அமலுக்கு வரவிருந்தது. இதுபற்றி ஆக., 25-ல் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த USA அதிகாரிகள் டெல்லி வரவிருந்தனர். அதில், வரி விதிப்பை குறைப்பது அல்லது தள்ளிப்போடுவது பற்றி பேசப்படும் என கூறப்பட்டது. ஆனால், சந்திப்பு ரத்தானதால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சந்திப்பு மீண்டும் திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 7, 2026

தலைமுடியை மென்மையாக்க சில டிப்ஸ்!

image

➤தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து முடியின் வேர் வரை தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும் ➤சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுங்கள் ➤ஹேர் டிரையர்கள், ஸ்ட்ரைட்னர்கள் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் ➤பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மர சீப்புகளை பயன்படுத்தலாம் ➤வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம். SHARE THIS.

News March 7, 2026

ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

image

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!

News March 7, 2026

கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

image

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?

error: Content is protected !!