News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..
News November 25, 2025
USA சமாதான வரைவு திட்டம் திருத்தம்: ஜெலன்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான USA-வின் வரைவு திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 28 அம்சங்களில் இருந்து 19 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் பல கோரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதால் இதை வரவேற்பதாக கூறிய அவர், திட்டம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தார்.
News November 25, 2025
உங்க வேலையை இங்க காட்டாதீங்க: பிரேமலதா

தேமுதிக கொடி, பேனரை அகற்றிவிட்டால் கூட்டம் நடக்காது என்பது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்பதை போல இருப்பதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். கோவையில் மட்டும் இந்த அராஜகம் நடப்பதாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


