News April 29, 2025
‘டூரிஸ்ட் பேமிலி’: முதல் ரிவ்யூ!

‘டூரிஸ்ட் பேமிலி’ பெரும் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், படத்தை லைகா நிறுவனத்தின் GKM தமிழ்குமரன் பாராட்டியுள்ளார். அவரின் X பதிவில், படம் தன் மனதை உருக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், படம் மாபெரும் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்ததோடு, படத்தில் நடித்த கலைஞர்களையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டினார். நீங்க படம் போறீங்களா?
Similar News
News December 7, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 7, 2025
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் Ex அமைச்சர் செல்லையா ராஜதுரை(98) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 – 1989 வரை தொடர்ந்து 33 வருடங்கள் MP-யாக இருந்துள்ளார். 1979-ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய இவர் MGR, சிவாஜி கணேசன் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். #RIP
News December 7, 2025
SIR படிவம் கொடுத்தவர்களின் கவனத்திற்கு..

SIR படிவம் கொடுத்தாச்சு, நம்ம வேலை முடிஞ்சுது என அசால்ட்டாக இருக்க வேண்டாம். உங்க படிவத்தை SIR அலுவலர், ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறாரா என்பதை செக் பண்ணுங்க. அதற்கு, <


