News July 5, 2025
ஹீரோவாக அறிமுகமாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில் சிறிய ரோலில் நடித்து கவனத்தை ஈர்த்திருப்பார். இந்நிலையில், இவர் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவரது உதவி இயக்குநரே இதை இயக்கவுள்ளாராம். ‘Corrected Machi’ என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.
Similar News
News July 5, 2025
நடிகர்கள் போதைப்பொருள் விவகாரம்… அதிரடி கைது!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், பல நடிகர்கள், நடிகைகள் கூட போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் விற்பனையாளராக இருந்த பயாஸ் ஷமேட் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளது.
News July 5, 2025
விதிகளை மீறிய ஜடேஜா..! பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?

இங்கி., எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 41 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் 2ம் நாள் அதிகாலையிலே அணி பேருந்துக்கு காத்திருக்காமல் மாற்று வாகனம் மூலம் மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். இந்திய வீரர்கள் தொடர்களில் விளையாடும் போது பிசிசிஐ ஏற்பாடு செய்யும் வாகனங்களிலே பயணிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இதை ஜடேஜா மீறியிருந்தாலும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.
News July 5, 2025
AI செய்த மேஜிக்: 18 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான பெண்!

கொலம்பியா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. IVF சிகிச்சையும் பலனளிக்காமல் போக, அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தை அணுகினார். அங்கு AI உதவியுடன் ஆண்களின் மறைந்திருக்கும் விந்தணுக்களை அடையாளம் காணும் முறையில் சிகிச்சை அளிக்கப்பட, தற்போது அவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர். AI மனித இனத்திற்கே பிரச்னை எனக் கூறப்படும் நிலையில், இது போன்ற செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.