News September 7, 2025
முழு சந்திர கிரகணம்.. யாருக்கு நல்லது, யாருக்கு கெட்டது

இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ராசிகாரர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதேநேரம், கடகம், மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமையை மோசமாக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இந்த சந்திர கிரகணம் பார்க்கப்படுகிறது. அதேபோல், கும்ப ராசியில் நிகழும் மாற்றம் வாழ்க்கையில் பதற்றத்தை அதிகரிக்குமாம். உஷாரா இருங்கள்..!
Similar News
News September 7, 2025
SCIENCE: உங்களால் வயிறு இல்லாமல் வாழமுடியுமா?

உணவை சேமிப்பது, அதை செரிமானத்துக்கு அனுப்புவது என முக்கிய வேலைகளை வயிறு செய்கிறது. ஆனால் வயிறு இல்லாமலும் நம்மால் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் சொல்கின்றனர். கேன்சர், எடை குறைப்பு சர்ஜரி உள்ளிட்டவைகளுக்காக வயிறு அகற்றப்படுகிறது. வயிறு இல்லாத நபர், உண்ணும் உணவு நேரடியாக சிறுகுடலுக்கு செல்லுமாம். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது, ஆனால் செரிமானத்தில் சிரமங்கள் ஏற்படலாம் என சொல்கின்றனர்.
News September 7, 2025
2 நாளில் ₹50 கோடியை அள்ளிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘மதராஸி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் படம் பட்டையை கிளப்பி வருகிறது. 2 நாள்களில் உலகளவில் ₹50 கோடியை படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளான இன்றும் பல இடங்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்க படம் பாத்தாச்சா?
News September 7, 2025
சந்திர கிரகணத்தில் இதெல்லாம் செய்யக் கூடாது!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. ஆலய நுழைவு தரிசனம் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்கள் செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.