News April 13, 2024
சிறையில் கெஜ்ரிவாலுக்கு சித்ரவதை

மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுவதாக AAP எம்பி சஞ்சய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உத்தரவின் பெயரில் கெஜ்ரிவால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவரது மன உறுதியை சிதைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: போதை பொருள் விற்பு.. போலீசார் பிடிப்பு!

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப்இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் மணிமாறன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
News November 27, 2025
அப்போ ஓடாத அஞ்சான் இப்போ எப்படி இருக்கு?

‘அஞ்சான்’ படத்தை Re-edit செய்து மீண்டும் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் ஷோவை பார்த்தவர்கள், படம் தற்போது ஓரளவு நன்றாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். படத்தின் நீளத்தை குறைத்து, எடிட்டிங்கின் மூலம், ஸ்கிரீன்பிளே சற்று மாற்றி இருப்பதாக குறிப்பிடுகின்றனர். படத்தின் சவுண்ட் & Picture Quality-ம் நன்றாக இருப்பதாகவும் சொல்கின்றனர். படம் நாளை ரிலீசாக உள்ளது. உங்களுக்கு ‘அஞ்சான்’ படம் பிடிக்குமா?
News November 27, 2025
வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா?

USA வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆப்கன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த திட்டமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், வாஷிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


