News December 22, 2024

தமிழ் சினிமாவின் டாப் – யார்ரா இந்த பையன்?

image

உலக அழகியுடனும் ஜோடி போட்டவர், பெண்களுக்கு பிடித்த ஆணழகனாக இருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையின் உச்சம் தொட்டார். பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என 3 இயக்குநர்களில் படங்களில் ஹீரோவான ஒரே நாயகனாக இருந்தவரை தெலுங்கு படத்தில் பார்த்த ரசிகர்கள், எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என மனம் வருந்தினர். தெரிஞ்ச கமெண்ட் பண்ணுங்க இல்ல அடுத்த போட்டோ பாருங்க

Similar News

News July 6, 2025

மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!

image

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350, இறால்- ₹300, சங்கரா மீன்- ₹150, மத்தி- ₹100, வஞ்சிரம்- ₹700, நண்டு- ₹150, வாவல் மீன்- ₹500-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் நாகையில் மீன்கள் விலை சற்று அதிகரித்துள்ளது.

News July 6, 2025

பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்: PM மோடி

image

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி என டிரினிடாட் & டொபாகோ பார்லிமென்ட்டில் PM மோடி பேசியுள்ளார். அவையில் பெண் MP-க்கள் அதிகமாக இருப்பதை பார்க்கும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார். இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கான மரியாதை ஆழமாக வேரூன்றி இருப்பதாகவும், நவீன இந்தியாவை உருவாக்க பெண்களின் கரங்களை வலுப்படுத்துகிறோம் என்றும் கூறினார். அடுத்த லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வருகிறதோ?

News July 6, 2025

எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்காதீர்கள்…

image

செய்தாக வேண்டும் என முடிவெடுத்து தொடங்கிய காரியத்தை பாதியில் நிறுத்துவது, நாமே தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு சமம். செய்ய முடியும் என நினைத்தால், அதனை செய்வதற்கான வழியைத் தேடுங்கள். பாதியில் நிறுத்துவதற்கு முன், ஏன் – எதற்காக – எங்கிருந்து தொடங்கினோம் என்பதை ஒரு முறை நினைத்து பாருங்கள். முயற்சியை நீங்கள் கைவிடும் போது தான், வெற்றி உங்களைக் கைவிடும். நம்பிக்கையுடன் போராடுங்கள். வெற்றி நிச்சயம்!

error: Content is protected !!