News June 8, 2024
தீபாவளியை குறிவைக்கும் முக்கிய திரைப்படங்கள்

விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2 ஆகிய 3 படங்களையும், வரும் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி அன்று வெளியிட படக்குழுக்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 2 மற்றும் கங்குவா படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News September 24, 2025
செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன்: OPS

செங்கோட்டையன் விரும்பினால் அவரை சந்திப்பேன் என OPS கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியில், CM வேட்பாளராக EPS-ஐ ஏற்க முடியாது என்ற TTV தினகரனின் கருத்தை வரவேற்பதாகவும் OPS தெரிவித்துள்ளார். இது, மீண்டும் NDA கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 24, 2025
இந்த தலைமுறையா நீங்கள்?

ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து 10 பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்த தலைமுறை நம் குடும்பத்திலேயே இருந்திருக்கலாம். இந்த பூர்வீக நிலத்தை வைத்தே வீடு கட்டி, திருமணம் செய்வது என தலைமுறைகள் மாறிக் கொண்டே வந்தது. ஆனால் தற்போதோ, சம்பாதிப்பதை கொண்டு அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே பெரும்பாலானோர் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News September 24, 2025
திருமண மோசடி: மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சம்மன்

திருமண மோசடி புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது ஏமாற்றுவதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் நீலாங்கரை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.