News October 17, 2025

தலை தீபாவளி சீர்வரிசை லிஸ்ட்!

image

புதுமண தம்பதியை தலை தீபாவளி கொண்டாட, பெண் வீட்டார் அழைக்கும்போது சீர்வரிசை கொடுப்பது வழக்கம். அதன்படி சீர்வரிசையின் விவரம்: தலா 5 வகையான இனிப்பு&காரம், மாப்பிள்ளைக்கு பேண்ட்&ஷர்ட், பெண்ணுக்கு பட்டுப்புடவை, வெற்றிலை பாக்கு, மஞ்சள்&குங்குமம், மாப்பிள்ளைக்கு தங்க மோதிரம், ₹501, வெள்ளி கிண்ணம், பூ, வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட 5 பழங்கள் அடங்கிய தட்டு, நெய் கொடுங்கள். உங்களுக்கு இதெல்லாம் கிடைச்சுதா?

Similar News

News October 17, 2025

₹21 லட்சத்துக்கு Free ஆக உணவு சாப்பிட்ட நபர்!

image

ஜப்பானில் ஒருவர் உணவு ஆர்டர் செயலியை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்டுள்ளார். செயலியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என புகார் கொடுப்பதை நம்பி, செயலியும் பணத்தை திருப்பி கொடுத்து, உணவையும் அளித்து வந்துள்ளது. 124 போலி சிம் கார்டு மூலம் 1,095 முறை அவர் உணவை சாப்பிட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் செய்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News October 17, 2025

புதிய கொடி அறிமுகம்.. அண்ணாமலை எடுத்த முடிவு

image

நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். உங்க கருத்து?

News October 17, 2025

₹30,000 சம்பளம்.. மத்திய அரசில் 610 காலியிடங்கள்!

image

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 610 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 21- 28. கல்வித்தகுதி: என்ஜினியரிங் டிகிரி. சம்பளம் ₹30,000. இதற்கு வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!