News August 24, 2024

Work from Home-ஐ எதிர்க்கும் டாப் நிறுவனங்கள்

image

Work from Home செய்பவர்களை காட்டிலும் அலுவலகத்திற்கு வருபவர்களிடமே அதிக திறன் இருப்பதாக META CEO மார்க் சக்கர்பெர்க் தெரிவிக்கிறார். அதனால், அந்நிறுவனத்தில் கடந்த 2023ல் வாரத்திற்கு 3 நாள்கள் அலுவலகம் வர வேண்டும் என விதி திருத்தப்பட்டது. Tesla CEO எலான் மஸ்க், பணி ஒழுக்கத்தின் படி அது தவறானது என்கிறார். இது டெக் தொழில் நிறுவனங்கள் எடுத்த தவறான முடிவு என்கிறார் OpenAI CEO சாம் அல்ட்மேன்.

Similar News

News December 8, 2025

BREAKING: மு.க.அழகிரிக்கு அதிர்ச்சி

image

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 8, 2025

விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்: அன்புமணி

image

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.

News December 8, 2025

பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்

image

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் கல்யாண் சாட்டர்ஜி(81) காலமானார். 1968-ல் அபஞ்சன் படத்தில் அறிமுகமான இவர், கஹானி, சுகர் பேபி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த அவர், GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யஜித் ரேயின் பிரதித்வந்தி உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!