News May 22, 2024
ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 வீரர்கள்

ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 பந்து வீச்சாளர்களை தெரிந்து கொள்வோம். முதலிடத்தில் உள்ள யுவேந்திர சஹல் 158 போட்டிகளில் 204 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 2ஆவது இடத்திலுள்ள பியூஷ் சாவ்லா 192 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இப்பட்டியலில் பிராவோ 183 விக்கெட்டுகள் , புவனேஷ் குமார் 181 விக்கெட்டுகள், சுனில் நரேன் 179 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News August 30, 2025
கண்டிப்பாக Ro- Ko 2027 ODI உலககோப்பை விளையாடணும்..

ரோஹித், கோலி 2027 ODI WC தொடரில் விளையாடுவார்களா என்பது தான் தற்போதைய கேள்வி. இந்த நிலையில்தான், Ex வீரர் சுரேஷ் ரெய்னா, ரோஹித்- கோலி இருவரும் 2027 ODI WC விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். இருவருக்கும் நிறைய அனுபவம் இருப்பதாலும், ஏற்கெனவே T20 WC & சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளதாலும், 2027 ODI WC தொடருக்கான அணியில் கண்டிப்பாக இருவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். நீங்க என்ன சொல்றீங்க?
News August 30, 2025
‘சாதிவாரி வாட்ஸ்அப் குழுக்களில் அரசு அதிகாரிகள்’

போலீஸார், ஆசிரியர்கள், வருவாய் துறையினர் சாதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்களை நடத்துவதாக சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகளுக்கு, அரசு நிர்வாகத்தின் அணுகுமுறைதான் காரணமென அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் உயர் பொறுப்புகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News August 30, 2025
Health Tips: மழைகாலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள்

மழைக்காலத்தில் சளி, ஜுரம் எளிதில் வரும். இதனை தவிர்த்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, பேரிக்காய், நாவல் பழம், பப்பாளி, ப்ளம்ஸ், மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். இவை உங்கள் உடலில் நார் சத்து, நீர் சத்து, தோல் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கூட்டுகிறது. SHARE.