News October 2, 2025
பெங்களூரு நகரின் டாப்-5 சுற்றுலா தலங்கள்

வீக் எண்டில் ₹1,500 பட்ஜெட்டில் எங்காவது சுற்றுலா செல்ல பிளான் பண்றீங்களா? பெங்களூரு, அதற்கு நல்ல சாய்ஸ். சென்னையில் இருந்து ரயிலில் 2S வகுப்பில் சென்றுவர ₹400 மட்டுமே கட்டணம் என்பதால், குறைந்த செலவில் பல இடங்களுக்கு செல்லலாம். குறிப்பாக சர்ச் ஸ்ட்ரீட் சென்றால் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருள்களை சீப் அண்ட் பெஸ்டாக வாங்கி வரலாம். நீங்க பெங்களூரு சென்றிருக்கிறீர்களா? உங்க யோசனை என்ன?
Similar News
News October 2, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. சிறப்பு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்பதிவு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில் ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் திறக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
News October 2, 2025
RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடக்கம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. வரும் 6-ம் தேதி RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், வரும் 15-ம் தேதிக்குள் EMIS போர்ட்டல் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது.
News October 2, 2025
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்

விஜய் வெளியிட்ட வீடியோவில் தனக்கு உடன்பாடில்லை என சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் வீடியோவில் வெளிப்பட்டிருக்கும் எனவும், கரூரில் மட்டும் எப்படி இப்படி நடந்தது என அவர் கேட்டது தவறு என்றும் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு என்பது வாய்க்கரிசி எனவும், திரைப்பட வசனம் போல் விஜய் பேசியதாகவும் சாடியுள்ளார்.