News September 9, 2025
புரதச்சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

உடலில் புது செல்கள் உருவாவதற்கும், சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கும் புரதச்சத்து மிக அவசியமானது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்தை போதுமான அளவு கொடுக்க வேண்டும். நாம் நமது உடல் எடைக்கு ஏற்ப அன்றாடம் புரதச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபர் 55 முதல் 70 கிராம் புரதம் சாப்பிடுவது நல்லது.
Similar News
News September 9, 2025
2026 தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்டார் விஜய்

TVK தலைவர் விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் வரும் 13-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வாரத்திற்கு ஒருமுறை என சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படும் நிலையில், அனுமதி வேண்டி அட்டவணையை டிஜிபி அலுவலகத்தில் N.ஆனந்த் சமர்பித்துள்ளார். இது விஜய்யின் முதல் அரசியல் சுற்றுப்பயணமாகும்.
News September 9, 2025
சற்றுமுன்: இபிஎஸ் உடன் இணைந்தனர்

ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்பில் இருந்து விலகியதாக கூறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று சேலத்தில் EPS-ஐ நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோபி அதிமுக நகர செயலாளர் கணேஷ், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு தலைமையில் கோபி, அந்தியூர், பவானிசாகர் பகுதியை சேர்ந்த பலரும் மீண்டும் EPS-ன் பக்கம் திரும்பியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 9, 2025
24 வயது இளம் வீர ரத்தம் மண்ணில் உதித்த தினம்!

கார்கில் போரின் (1999) பரபரப்பான நிமிடங்களில், Point No 4875-ல் காயமடைந்த சக வீரரை காப்பாற்ற முயற்சித்தார் அந்த 24 வயது இளைஞர். அப்போது எதிர்பாரா விதமாக எதிரிகளால் சுடப்பட, வீர மரணம் அடைந்தார், இமாச்சலை சேர்ந்த இந்த இளம் வீரரான விக்ரம் பத்ரா. ‘வீர சக்ரா’ விருது வழங்கப்பட்ட இவரது வீர பயணத்தை தழுவியே விஷ்ணுவர்தனின் ‘Shershaah’ என்ற படம் (2021) எடுக்கப்பட்டது.