News April 3, 2025
டாப் 5 பிளாஸ்டிக் மாசு நிறைந்த நாடுகள்!

பிளாஸ்டிக் மாசு நிறைந்த 5 நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக 3.5 மி.டன்னுடன் நைஜீரியா, 3.4 மி.டன்னுடன் இந்தோனேஷியா, 2.8 மி.டன்னுடன் சீனா, 2.6 மி.டன்னுடன் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
Similar News
News April 4, 2025
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி முடிவடைந்தது. மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
News April 4, 2025
என்னா தத்துவம்!! சூப்பர் செல்வராகவன் சார்

‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநரான செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் எக்ஸ் தளத்தில் அவ்வப்போது தத்துவங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் “கடவுள் உங்களின் வாழ்க்கையில் இருந்து ஒருவரை நீக்கும்போது அதன் மதிப்பை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் பின்னர் கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொல்வீர்கள்.” என தெரிவித்துள்ளார். என்னவா இருக்கும்?
News April 4, 2025
நீட் விவகாரத்தில் உதயநிதி கள்ள மவுனம் : இபிஎஸ்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்வதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்பு, 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்ததற்கு என்ன பதில், நீட் தேர்வு இருக்காது என்று கூறிய உதயநிதி கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.