News September 18, 2025
ஆகஸ்ட்டில் அதிக விற்பனையான டாப் 5 கார்கள்

ஆகஸ்ட் மாதத்தில் மாருதி கார்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கியது Team bhp வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி எர்டிகா முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 18,445 கார்கள் விற்பனையாகியுள்ளன. 16,509 கார்களுடன் மாருதி டிசையர் 2வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஹுண்டாய் க்ரெட்டா, வேகன் – ஆர், டாடா நெக்ஸான் பிடித்துள்ளன.
Similar News
News March 31, 2026
மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை.. எச்சரிக்கை

ஃபங்ஷன் வருது, கோயிலுக்கு போகணும், இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பல பெண்கள் பீரியடை தள்ளிபோட மாத்திரை உட்கொள்கின்றனர். ஆனால், இது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குமட்டல், தலைவலி, மூட் ஸ்விங் போன்ற Side effects ஏற்படுவதுடன் 75% பேருக்கு பீரியட் பிரச்னைகள், அதிக ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தக்கட்டு, ஹார்மோன் பாதிப்பும் ஏற்படுமாம். ALERT!
News March 31, 2026
அண்ணாமலைக்கு அழைப்பு.. ஹெலிகாப்டரில் புறப்பட்டார்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி பிரசாரத்தில் இருந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 31, 2026
மனைவியிடம் அனுமதியின்றி உறவும் ரேப் தான்.. சின்மயி

திருமணம் என்ற பெயரில் பெண்ணின் அனுமதியின்றி அவளிடம் உறவு கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று பாடகி சின்மயி X-ல் பதிவிட்டுள்ளார். ‘Chiraiya’ என்ற வெப் தொடரில், பெண்ணின் சம்பந்தமின்றி கணவர் உறவு கொள்ளும் காட்சிக்கு அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், Arranged Marriage-ல் கணவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு மனைவிக்கு போதுமான நேரமில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


